Header Ads

  • சற்று முன்

    அமைச்சரவை விரிவாக்கம் பாஜக - விற்கு வேண்டுமென்றால் நன்மை பயக்கலாம்.. நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன..? கமல் ஹாசன் ட்விட்..


    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவு படுத்தப்பட்டது. 
     புதிதாக பதவியேற்ற ஒன்றிய அமைச்சர்கள் 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம் பெற்றுள்ள 28 பேர் மத்திய இணை அமைச்சர்கள்.

    இதனைத்தொடர்ந்து புதிய ஒன்றிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவரான எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது என மத்திய அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட முருகன் கூறியுள்ளார்.   

    இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்”தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியாதபடி இருக்கிறது அமைச்சரவை விரிவாக்கம். நாடு அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்திருக்கிறது. இந்தச் சரிவிலிருந்து மீளும் நோக்கத்தில் அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கவேண்டும்.

    ஆனால், உள்கட்சித் தலைவர்கள், வேறு கட்சிகளிலிருந்து இணைந்தவர்கள், வரவிருக்கிற மாநில தேர்தல்கள் ஆகியவற்றை மனதில் வைத்து நடந்திருக்கும் இந்த விரிவாக்கம் பாஜகவிற்கு வேண்டுமானால் நன்மை பயக்கலாம். நாட்டிற்கு இதனால் ஆகப்போவதென்ன?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad