Header Ads

  • சற்று முன்

    ஆபத்தான முறையில் வெள்ளத்தை கடக்கும் மக்கள்.. பதபதைக்க வைக்கும் காட்சி..

     
     
     
     வட மாநிலங்களில்  கடந்த 10 ஆம் தேதியே  தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காராணமாக கடந்த சில தினங்களாக ஹிமாசலப் பிரதேசம், உத்தராகாண்ட்  உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.. அதிலும் ஹிமாச்சலில், தர்மசாலா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 
     

    அதேபோல் அண்டை மாநிலமான உத்தராகண்டில் தப்ராணி, சமோலி உள்ளிட்ட இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கங்கோதிரி மற்றும் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன. 

    சாலையை சீரமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மேலும் மீட்பு பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. மேலும் டேராடூன் மாவட்டத்தில் உள்ள அம்லாவா ஆற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கு காராணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக  பாலம் உடைந்தது. இருப்பினும் மக்கள் ஆபத்தான முறையில் அந்த பாலத்தை கடக்கும் காட்சிகள் பதபதைக்க  வைக்கிறது.. 
     



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad