Header Ads

  • சற்று முன்

    மருமகனுக்காக ஆடி சீர் கொடுத்து அசத்திய மாமனார்.... காண்போரை வியக்கவைக்கும் சீர்...

     


    பெண்ணை திருமணம் செய்து கொடுத்தால் மாப்பிள்ளை வீட்டிற்கு ஆடி சீர் கொடுக்க வேண்டும். தமிழர்கள் ஆடி சீர் கொடுத்து கொண்டாடுவதைபோல் தெலுங்கில் ஆஷாதம் என்ற பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடி வருகின்றனர்.

    இந்த விழாவில் திருமணமான மகள்களுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம். தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடி மாத சீர்வரிசையை பரிசாக வழங்குவர். அந்த வகையில் இங்கு மருமகனுக்கு மாமனார் கொடுத்த சீர் வரிசையை கண்டு மூக்கு மேல் கை வைக்கும் அளவிற்கு மக்கள் வியந்துள்ளன.

     

    ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் மாவட்டத்தில் ஆஷாதம் விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ஏனாமை சேர்ந்த பவன் குமார் என்பவருக்கு ஆந்திராவின் ராஜமுந்திரியைச் சேர்ந்த அவரது பலராம கிருஷ்ணா என்பவரின் மகளை திருமணம் செய்து கொடுத்தனர். தனது மகள் பிரத்யுஷாவை மருமகன் சிறப்பாக கவனித்து கொள்வதால் மகிழ்ச்சி அடைந்த மாமனார் பலராம கிருஷ்ணன் வித்தியாசமான சீர்களை கொடுத்து அசத்தியுள்ளார். அந்த வகையில், 1000 கிலோ மீன்கள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 250 கிலோ மளிகைப்பொருட்கள், 250 வகையான ஊறுகாய், 1000 கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக சீர்வரிசையை மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனை கண்ட உள்ளூர் மக்கள் பூரிப்படைந்துள்ளன.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad