Header Ads

  • சற்று முன்

    மெக்சிக்கோவில் நடுக்கடலில் கொந்தளித்த தீ.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ...


    மெக்சிகோ வளைகுடாவில், அரசு எண்ணெய் நிறுவனமான மெக்சிகன் பெமெக்ஸ், கடலுக்கடியில் எண்ணெய் குழாய்களை பதித்துள்ளது. அதில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக எரிவாயு கசிந்ததை அடுத்து தீப்பிழம்புகள் கடலுக்கு மேல் கொப்பளிக்கத் தொடங்கின. 
    எரிமலைக் குழம்புகள் போல கொந்தளித்த இந்த தீப்பிழம்புகளை 'நெருப்பு கண்' என்று சமூக வலைதளங்களில் கூற்ப்படுகின்றன. அந்த தீயை நான்கைந்து கப்பல்கள்  ஐந்து மணி நேர போராட்டத்துக்குப் பின் அந்த தீ அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் எரிவாயு கசிவைத் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி தடையின்றி நடைபெறுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தீப்பிழம்புகள் முழுமையாக வெளியேற்றப்பட்டதாகவும் தீ விபத்துக்கான காரணம் குறித்து அந்நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad