Header Ads

  • சற்று முன்

    காதல் விவகாரத்தால் மகளை கண்டித்த தாய்... அடுத்து தாய் எடுத்த விபரீத முடிவு....

     


    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்  (50)  வேன் டிரைவர். இவரது மனைவி அம்சவேணி (42).  இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் பிரியா (19), திரிஷா (17), மகன் விஷ்ணு (13). இந்நிலையில் பிரியாவுக்கு அடுத்த மாதம், 21 ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் பிரியாவும், அதே கிராமத்தை சேர்ந்த திருப்பதி (19) என்ற வாலிபரும் ஏற்கனவே காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த அம்சவேணி, நேற்று முன்தினம் பிரியாவை கண்டித்துள்ளார். இது பற்றி திருப்பதிக்கு போனில் பிரியா தெரிவித்துள்ளார். இதனால் இருவரும், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அவரவர் வீட்டில் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்

    இந்நிலையில் உறவினர்கள் இருவரையும்  மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால மனமுடைந்த அம்சவேணி, நேற்று முன்தினம் நள்ளிரவு,12 மணியளவில் மகள் திரிஷா, மகன் விஷ்ணு ஆகியோருடன் வீட்டின் அருகே உள்ள, விவசாய கிணற்றில் தற்கொலை முயன்று குதித்தனர். அப்போது, பாறையில் மோதி அம்சவேணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவன் விஷ்ணுக்கு, நீச்சல் தெரியாமல் தத்தளித்தபோது, அவரை அம்சவேணி நீரில் அழுத்தியதில், அவர் மூச்சுத்திணறி இறந்தார்அப்போது மயக்கமடைந்த அம்சவேணியும்  நீரில் மூழ்கினார். ஆனால் பயத்தில் திரிஷா கிணற்று மோட்டார் பைப்பை இறுக்க பிடித்துக்கொண்டார். நேற்று அதிகாலை சிறுமி திரிஷாவின் கூச்சலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து, போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினரின் உதவியோடு சிறுமியை மீட்டனர். அம்சவேணி மற்றும் விஷ்ணுவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad