Header Ads

  • சற்று முன்

    வாணிராணி சீரியலில் நடித்த வேணு அரவிந்துக்கு கோமா....


    வாணிராணி, செல்வி போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். இவர் கிரீன் சிக்னல், காசளவு தேசம், காஸ்ட்லி மாப்பிள்ளை என பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன், இனியவள் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பின் திறமைக்காக ‘கலைமாமணி’ விருதும் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சமீபத்தில்  வேணு அரவிந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த வேணு அரவிந்திற்கு மூளையில் கட்டி இருந்ததது தெரிய வந்துள்ளது. பின்னர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு பின் அவர் சுய நினைவை இழந்து கோமாவில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad