Header Ads

  • சற்று முன்

    பட்டப்பகலில் கோவிலில் கிடந்த பச்சிளம் குழந்தை.... போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு...

     



    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிபாளையம் காந்தி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு நவகிரக சன்னிதி அருகே நேற்று பிற்பகல் பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று  இருந்தது. நீண்ட நேரமாகியும் குழந்தையை யாரும் எடுக்காததால் அதிர்ச்சியடந்த பக்தர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிலுக்கு வந்த பக்தர் யாரோ ஒருவர் குழந்தையை விட்டுச்சென்றது தெரிய வந்தது. குழந்தை நலமுடன் இருப்பதை அறிந்த போலீசார், அதனை மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு  செய்து குழந்தையை கோவிலில் விட்டுச்சென்ற மர்மநபர்கள் யார் என விசாரணை செய்து வருகின்றனர். 




     


     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad