Header Ads

  • சற்று முன்

    சென்னை ஐ.ஐ.டியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை!..


     

    கடந்த 10 ஆண்டுகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜாதி, மத ரீதியாக பாகுபாடு பார்க்கப்படுவதாகவும், மாணவர்கள் நடத்தப்படுவதாகவும்  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதே குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமீபத்தில் விபின் என்ற உதவிப் பேராசிரியர் ஒருவர், தனது வேலையை ராஜினாமா  செய்திருந்தார். 

    அவரது ராஜினாமா கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய அடுத்த நாளே, 22 வயது ஆராய்சி உதவியாளர் உன்னி கிருஷணன் என்ற இளைஞர், எரிந்தநிலையில ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியின் மகனான உன்னி கிருஷ்ணன் மரணத்தில் மர்மம் இருந்தாலும், போலீஸ் தரப்பில் தற்கொலை என்றே கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் அருண் ஹால்டர் தலைமையில் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது..

    மேலும், ஐ.ஐ.டி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, பதிவாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில்  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad