Header Ads

  • சற்று முன்

    ஜிகா வைரஸ் பாதிப்பால் கர்ப்பிணி பெண்களுக்கு சிறிய தலையுடன் குழந்தை பிறக்க வாய்ப்பு - மா.சுப்பிரமணியம்...

     


    நாடு முழுவதும் கொரோனா 2 வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது குறைந்து வருகிறது. ஆனால் கேரளாவில் சில நாட்களாக ஜிகா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இட்ன்ஹ வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவுவததால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கேரளாவின் அண்டை மாநிலமான தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

     

    இந்த நிலையில் கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

     

    ”டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் ”என்றும் அவர் தெரிவித்தார்.

     

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad