Header Ads

  • சற்று முன்

    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்....


    தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின்பு புதிய தலைவராக நாயினார் நாகேந்திரன், எச். ராஜா, வானதி சீனுவாசன் என பலரது பெயர் கூறப்பட்ட நிலையில் தேசிய எஸ்.சி.,  எஸ்.டி., ஆணைய துணை தலைவராக இருந்த எல். முருகன், தமிழக பாஜக தலைவராக, 2020 மார்ச் மாதம்  நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று, பொறுப்பேற்றார். தமிழக பாஜக-வுக்கு யாரை புதிய தலைவராக நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்ட நிலையில் இன்று அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார். 

    முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கர்நாடகா காவலத்துறையில் 10 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தனது காவல் துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக -வில் சேர்ந்தார். கட்சியில் அவர் மாநில துணை தலைவர் பதவி வகித்து வந்தார். கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad