Header Ads

  • சற்று முன்

    நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி சென்ற கார் விபத்து... தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு....

     


    மாடலிங் துறையில் பிரபலமாக இருந்த யாஷிகா ஆனந்த், இனிமே இப்படித்தான் படம் மூலம் 2015ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு பிரபலமானவர். 1999 ல் டெல்லியில் பிறந்த யாஷிகா ஆனந்த்  கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு-2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    இந்நிலையில், நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வேகமாக சென்றபோது, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் உள்ள சாலை தடுப்பில் மோதி கார் கவிழ்ந்தது. இதில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவருடன் பயணம் செய்த இரண்டு பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

     இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவாணி(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் மற்றும் நணபர்கள் இரண்டு பேரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad