Header Ads

  • சற்று முன்

    மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு...


    வடமாநிலங்களான அசாம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வரை மகாராஷ்டிராவில் மட்டும் 136 பேர் நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் 30-க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக அசாம் மாநிலத்தில்  கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பணியின் போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன. மதுரை மாவட்டம் ஆலடிபட்டியை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் பணியில் ஈடுபட்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று இரவு 8.30 மணிக்கு மேல் தமிழகத்துக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad