Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பலத்த மழை....


    தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தருமபுரி, சிவகங்கை, விருதுநகரில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னையை பொருத்தவரை  வானம் தெளிவாக காணப்படும். மாலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


    இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad