Header Ads

  • சற்று முன்

    கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இளம்பெண் தற்கொலை...


    வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பிரியா(29). இவருக்கும், மூஞ்சூர்பேட்டை பகுதியை சேர்ந்த நவீன்குமாருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர்.  
    இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களிலேயே கணவரை பிரிந்த பிரியா, தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். திருமண வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டு வந்த பிரியாவிற்கு  மனநலம் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார், பிரியாவின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 2 ஆண்டுகளில் பிரியா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வேலூர் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad