Header Ads

  • சற்று முன்

    பத்தாம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத்திருமணம் - போக்சோ சட்டத்தின் கீழ் மாப்பிள்ளை கைது...

     


    பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து-ஜோதிமணி. இவர்களது மகன் ஆனந்த குமார். ஆனந்த குமாரின் பெற்றோர்கள் ஆனைமலையைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை ஆனந்தகுமாருக்கு பேசி முடித்துள்ளனர். ஆனால் சிறுமிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி அந்த சிறுமிக்கு ஆனந்தகுமாரை நேற்று திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியும் வேறு வழியில்லாமல் ஆனந்தகுமாரை திருமணம் செய்துகொண்டார்.

     

    ஆனால் திருமணம் முடிந்த நிலையில் சிறுமி கோவை குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனக்கு கட்டாய திருமணம் செய்துவிட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

    சிறுமியின் புகாரையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தின் அலுவலர், கோமங்கலம்புதூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் புகார் உண்மை என்பதை அறிந்து, இருவீட்டாரையும் அழைத்துச்சென்று பொள்ளாட்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். ஆனந்தகுமாரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்த போலீசார், இருவீட்டார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad