Header Ads

  • சற்று முன்

    ”தேசத்திற்காக வாழ்க்கையை அற்பணித்தவர் காமராஜர்”- பிரதமர் மோடி அஞ்சலி.

     


    பெருந்தலைவர் காமராஜரின் 119 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை ‘கல்வி வளர்ச்சி தினமாக தமிழக அரசு கடைபிடிக்கிறது.   இதனையொட்டி  அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள்  அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதேபோல் பிரதமர் மோடியும், காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

    அதில்,” மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையடையச் செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்  அவர். காமராஜர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்ணுரிமை ஆகியவை இன்றளவும்  மக்களுக்கு ஊக்கமளித்து வருகின்றன. “ என்று குறிப்பிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad