Header Ads

  • சற்று முன்

    8 லட்சம் செட்டாப் பாக்ஸ் மாயம்..!! ரூ.400 கோடி இழப்பு - அதிமுக ஊழலை தோலுரிக்கும் குறிஞ்சி சிவக்குமார்...

     


    அதிமுக ஆட்சியில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ் மாயமாகி இருப்பதாகவும், இதனால் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார். 


    கடந்த மார்ச் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில், திரு. குறிஞ்சி சிவக்குமார் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஈரோடு சென்ற குறிஞ்சி சிவக்குமார், அங்குள்ள கலைஞர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்தாமல் அதிக அளவிலான சேனல்களையும்,  சேவைகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

     மேலும், அரசின் அனைத்து துறை சேவைகளையும் பொதுமக்கள் பெற்றிடும் வகையில்,  தமிழகத்தில் கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் அரசின் இ.சேவை குக்கிராமங்கள் வரை  விரிவுபடுத்தப்படும் என கூறினார். திமுக ஆட்சியில் 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, அதில் 32 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இருந்ததாகவும், அதிமுக அரசின் தவறான நடவடிக்கையால் தற்போது 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தார்.  மீதமுள்ள 8 லட்சம் செட்டாப்பாக்ஸ்  காணவில்லை என்றும், இதனால்  அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

    இறுதியாக அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் என்றும்,  ஆன்லைன் கல்வி,  இன்டர்நெட் சேவை கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்லப்படும் என்றும் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad