Header Ads

  • சற்று முன்

    திமுக-வில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்... உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்வோம் என உறுதி...

     



     மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி, திடீரென “வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை” என்று அறிவித்தார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, அதே நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன்  முன்பு இருந்ததைப் போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் என்றும் தெரிவித்தார். இதனால் பல ஆண்டுகள் இலவு காத்த கிளி போல காத்திருந்த மன்ற நிர்வாகிகள் சிலர் , கடுப்பாகி ரசிகர் மன்றத்திலிருந்து விலகினர். 

    ஏற்கெனவே ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் 10 பேர் திமுகவில் இணையவுள்ளாதாகவும் தெரிவித்தனர். அதன்படி இன்று 8 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அவர்களது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 3 மாவட்ட செயலாளர்கள், மகளிரணி, வர்த்தக அணி, வழக்கறிஞர் அணி மற்றும் இளைஞரணி செயளார்கள் தங்களது ஆதரவாளர்களுடன் இணைந்தனர்.

    இதில், “முதலமைச்சர் சட்டமன்றத்தில் அரியணை ஏறியதுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் களப்பணிகளை செய்து திமுகவை வெற்றியடையச் செய்வோம் “ என காஞ்சிபுரம் மகளிரணி மாவட்ட செயலாளராக இருந்த விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad