Header Ads

  • சற்று முன்

    1 கோடி பார்வையாளர்களை கடந்த வலிமை படத்தின் முதல் பாடல்.....


    நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் மற்றும் ஜி ஸ்டூடொயோஸ் தயாரிப்பில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’ . இந்த படத்திற்கு பின் இருவரும் இணைந்திருக்கும் படம் வலிமை. இப்படத்தின் தயாரிப்பு 2 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்துள்ள நிலையில் வலிமை படத்தின் முதல் பாடல் கடந்த இரு தினங்களுக்கு முன் யூடியூபில் சோனி மியூசிக் சேனலில் வெளியானது. மேலும் சங்கர் ராஜா இசையமைப்பில்,விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவான
      ”நாங்க வேற மாறி....”  பாடல் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    இந்நிலையில் இந்த பாடல் கடந்த இரு நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனிடயே  இந்த படம் தீபாவளியன்று  திரையரங்கில் வெளியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad