Header Ads

  • சற்று முன்

    பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு மாணிவி தற்கொலை....


    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் முருகேசன் தவமணி தம்பதிகள். இவர்களது மகள் அஸ்மிதா (17), 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்மிதா தன் தோழிகளுடன் அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெற்றோர் செல்போனில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு  கண்டித்துள்ளனர். ஆனால்  அஸ்மிதா கேட்காமல் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். 

    இந்நிலையில் நேற்று தவமணி மறுபடியும், செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஸ்மிதா, யாரும் இல்லாத நேரத்தில்  வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வீட்டிற்கு வந்த பெற்றோர் மகளை தேடியுள்ளனர். அப்போது  மரத்தில் சடலமாக தொங்கிய அஸ்மிதாவை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் குறிஞ்சிப்பாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad