Header Ads

  • சற்று முன்

    அரியலூர் மாவட்டம் - 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை....



    அரியலூர் மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி.  கடந்த 12 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது, ரஞ்சித் (33) என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளார். 

    இதனை தொடர்ந்து, சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் ரஞ்சித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி சிறுமியிடம் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(23), சத்ய ராஜ் (24), விஜய் (28)  ஆகிய 3 பேரும் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும் அந்த 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad