Header Ads

  • சற்று முன்

    இயர்ஃபோன் வெடித்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு....

    ராஜஸ்தானில் புளூடூத் இயர்ஃபோனை காதில் மாட்டியவாறு செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த சிறுவன், இயர்ஃபோன் வெடித்து  பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்கிற 15 வயது சிறுவன், இயர்ஃபோன் மூலம் கைபேசியில் பேசிச்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இயர்ஃபோன் வெடித்ததில், சிறுவன் மயங்கி விழுந்துள்ளான். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். 

    உயர்ஃபோன் வெடித்த அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததாகவும், அவரது 2 காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். சார்ஜ் போட்டுக்கொண்டே செல்ஃபோனில் பேசும்போது இதுபோன்ற விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. ஆனால் இயர்ஃபோன் வெடித்து ஒருவர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad