Header Ads

  • சற்று முன்

    ஹைட்டி நிலநடுக்கம்- 2 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை....




    கடந்த சனிக்கிழமை அன்று வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடான ஹைட்டியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. தலைநகர் போர்டோபிரின்ஸுக்கு மேற்கு புறமாக சுமார் 125 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. 

    இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அதில் வசித்த ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நிலநடுக்கத்தால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 27 ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 1,941 பேர் ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 


    இந்த நிலநடுக்கத்தால் 2,868 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் 5,410 கட்டடங்கள் சேதாரமாகியிருக்கிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் சடங்கள் மட்டுமே மிஞ்சுகின்றன எனவும் அந்நாட்டு அரசு அச்சத்துடன் தெரிவித்துள்ளது. 



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad