Header Ads

  • சற்று முன்

    மதுரையில் மின்னல் தாக்கி 21 ஆடுகள் உயிரிழப்பு....


    மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டிக்கு அருகேயுள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(37).  கூலித்தொழிலாளியான மாரிமுத்து சொந்தமாக 16 ஆடுகள் வைத்திருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (36) என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகள் என மொத்தம் 21 ஆடுகளையும் பட்டியில் அடைத்துவிட்டு மாடு மேய்க்கச் சென்று விட்டனர்.  

    இந்நிலையில் மாடு மேய்ச்சலை முடித்துவிட்டு நேற்று  வந்தபோது  இரவு இடி மின்னலுடன் பெய்த கனமழையில் மின்னல் தாக்கி 21 ஆடுகளும் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. மேலும் தகவலறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அதிகாரிகளிடம் பேசிய மாரிமுத்து, செல்வம் ‘ ஆடுகளை வளர்த்து தான் நாங்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். ஆனால் இப்போது அதனை இழந்து நிற்கிறோம். அதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







    No comments

    Post Top Ad

    Post Bottom Ad