Header Ads

  • சற்று முன்

    பிறந்த குழந்தையின் எடை 212 கிராம்.. உயிர் காக்கும் கருவிகளின் உதவியோடு குழந்தைக்கு சிகிச்சை....


    சிங்கப்பூரைச் சேர்ந்த குவெக் வீ லியாங் மற்றும் வாங் மீ லிங் என்ற  தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். வாங் மீ லிங் 2 வது முறை  கருவுற்ற நிலையில் அவருக்கு ப்ரீ க்ளம்ப்சியா என்ற அரியவகை நோய் இருந்துள்ளது. இந்த நோயால் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், புரோட்டீன் சிறுநீர் வழியாக அதிக அளவில் வெளியேறியுள்ளது. 

    இதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையின் எடை 212 கிராம் இருந்தாகவும்  இந்த குழந்தைக்கு குவெக் யூ சுவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    மேலும் குழந்தையின் எடை குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால் மருத்துவ செலவை சமாளிக்க திணறினர். 

    இந்நிலையில்மருத்துவ செலவிற்கு நிதி திரட்ட ஆரம்பித்த சில வாரங்களிலேயே 2 கோடிக்கும் அதிகமாக நிதியை திரட்டியுள்ளனர். மேலும் உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது குழந்தையின் எடை 6 கிலோவாக உள்ளது. மேலும்  13 மாதங்களுக்கு பிறகு ஜூலை 9 ஆம் தேதி குழந்தையுடன் பெற்றோர் வீடு திரும்பியுள்ளனர். 2  கோடி நிதி திரட்டியதில் 1 கோடி செலவான நிலையில் மீதி பணத்தைத் தன்னார்வ அமைப்பிடம் திரும்ப அளித்துவிட்டனர்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad