Header Ads

  • சற்று முன்

    ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மேலும் ஒரு சாதனை... கடந்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் ஃபார்லோவர்ஸ்....


    இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்  நீரஜ் சோப்ரா (23). தற்போது இந்திய ராணுவம் தரைப்படையில் இளைய அதிகாரியாக பணியாற்றுகிறார். இந்நிலையில் 
    டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தடகளத்தில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி முனையை செலுத்தினார். மேலும் 2 வது முயற்சியில் அதைவிட கூடுதலாக 87.58 மீட்டர் தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமையை சேர்த்துள்ளார். அதேபோல் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் அபினவ் பிந்தரா முதல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதற்கு பிறகு ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று 2 வது இந்தியர என்ற பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில் 120 ஆண்டுகளில் ஈட்டி எறிதலில் இந்தியா முத்ல் தங்கம் பெற்றது இதுவே ஆகும். மேலும் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநிலங்கள் பரிசுத் தொகைகளை வழங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


    மேலும் ராணுவத்தில் பணியாற்றிவரும் நீரஜ் சோப்ரா தன்னுடைய இந்த முன்னேற்றத்துக்கு  துணையாக இருந்த அனைவருக்கும் ட்விட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உணர்வை நான் இன்னும் அனுபவித்து வருகிறேன். மேலும் எனக்கு ஆதரவளித்த, ஆசிர்வதித்த , என்னை இது வரை அழைத்து வந்த, உதவி செய்த இந்தியாவில் உள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். எப்போது இந்த தருணம் என் வாழ்வில்  நிலைத்திருக்கும்”  எனத் தெரிவித்துள்ளார். 


    ஒலிம்பிக்கில் சாதனை புரிந்த நீரஜ் சோப்ரா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சாதனை புரிந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு முன்பு அவருக்கு 100k அதாவது 1 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். தற்போது தங்கம் வென்ற பிறகு கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பு  1 மில்லியன் ஃபாலோவர்ஸ் அவரை பின்தொடர்ந்துள்ளனர். ஆனால் தற்போது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் ட்விட்டரில் 3 லட்சத்திற்கு மேலானோர் பின்தொடர்கிறார்கள். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளனர்.








    No comments

    Post Top Ad

    Post Bottom Ad