Header Ads

  • சற்று முன்

    தலிபான்களின் வெறிச்செயல்.... 2 ஆப்கானியர்கள் சுட்டுக்கொலை... பதற வைக்கும் வீடியோ...


    கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதன் முடிவுகளாக அமெரிக்க படைகள் விலகி தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதால் முடிவுக்கு வந்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் அதிகாரத்தை கைப்பற்றியதால், மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில் தலிபான்களுக்கு எதிராக ஜலாலாபாத் பகுதியில் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த போராட்டத்தில் தலிபான் அமைப்பின் கொடியை அகற்றிவிட்டு ஆப்கானிஸ்தானின் கொடியை ஏற்றியுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜலாலாபாத் நகரின் முக்கிய  வீதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, பலிபான்கள் அங்கிருந்த மக்களை சரமாரியாக சுட்டுள்ளனர். 

    இந்த துப்பாக்கி சுடு தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad