Header Ads

  • சற்று முன்

    மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி...



    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்  இந்திரா(52). இவரது மகள் மகாலட்சுமி (25). மகாலட்சுமிக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா குழந்தையுடன் தனது வீட்டின் முன் பக்கத்தில் இருந்த கம்பியில் துணி காய வைத்துள்ளார். அப்போது அருகே இருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தாக்கியதில்  3 வயது பெண் குழந்தையும், இந்திராவும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அதனை கண்ட குழந்தையின் தாய் அவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளார். ஆனால்  அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்சாரம் தாக்கி 3 வயது குழந்தை உட்பட  மூவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த சம்பவம் குறித்து   போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad