Header Ads

  • சற்று முன்

    இமாச்சல் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு....


    இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கின்னார் மாவட்டம் ரெகாங் பியோ- சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் இன்று நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.  பேருந்தில் 32-க்கும் மேற்பட்ட  பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.  தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் காரில் சிக்கிய 6 பேரை மீட்டனர். மேலும் உயிருடன் புதைந்த 32-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

    இந்நிலையில் மண்ணுக்குள் புதைந்த வாகனங்களில் இருப்பவர்களை மீட்பதற்காக இந்தோ-திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக இந்தோ-திபெத்திய படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad