Header Ads

  • சற்று முன்

    அரசு பேருந்து மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு....


    திருச்சி மாவட்டம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவரும் மனைவி மலர்(28), மகன் தர்ஷன்(8), மகள் தர்ஷினி (3) என 4 பேரும் சிறுகாம்பூர் கரியமாணிக்கத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது கிளியநல்லூர் பகுதியில் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் சென்றபோது சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியது.

    இதில் விபத்தில் சிக்கிய 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருச்சிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதில் மணிகண்டனுக்கு கால் முறிந்துள்ளதால் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் 3 வயது குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் படுகாயமடைந்த  தாய் மற்றும் 8 வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad