Header Ads

  • சற்று முன்

    உத்தரபிரதேசதம் - மழை வெள்ளத்தால் 600 கிராமங்கள் மூழ்கியது ...


    தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்ததில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது வரை வரலாறு காணாத அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் தொடர்மழையால் யமுனை, கங்கை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 600 கிராமங்கள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் வெள்ளத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது.  அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட பின் அங்கே நிவாரண பணிகளை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப்படையினர், இந்திய ராணுவ வீரர்களும் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad