Header Ads

  • சற்று முன்

    படகு கவிழ்ந்து 7 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி....

    ஆப்பிரிக்காவில் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா ஏரியில், படகு சவாரி மிகப் பிரபலம். இந்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதுண்டு. அந்தவகையில் பயணிகளுடன் சவாரி மேற்கொண்ட  படகு ஒன்று திடீரென கவிந்து விபத்துக்குள்ளானது. இதில்  பயணம் செய்த 80 பேரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

     இந்நிலையில் அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சிலர், படகு விபத்துக்குள்ளானதை பார்த்துள்ளனர். உடனடியாக நீரில் இறங்கி 76 பேரை பத்திரமாக மீட்டனர். இருப்பினும்  7 சிறுவர்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து  வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொவதாக தெரிவித்தனர்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad