Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.


    தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் அடிக்கடி ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    1) ராணிபேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் ஐ.பி.எஸ், மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ் கமாண்டன்ட் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    2) மதுரை பட்டாலியன் தமிழக சிறப்பு போலீஸ், கமாண்டன்ட் பணியில் இருந்த இளங்கோ ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    3) சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் ஐ.பி.எஸ், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    4) ராமநாதபுரம் கடலோர காவல் துறை, கண்காணிப்பாளர் ஜெயந்தி ஐ.பி.எஸ், சேலம் மண்டல அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

    5) சேலம் மண்டல் அமலாக்கத் துறை கண்காணிப்பாளராக இருந்த மகேஷ் குமார் ஐ.பி.எஸ், நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    6) சென்னை பொருளாதார் குற்றப்பிரிவு காவல் பொது ஆய்வாளராக இருந்த கல்பனா நாயக் ஐ.பி.எஸ், சென்னை ரயில்வே காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    7) பணி விடுப்பில் இருந்து திரும்பிய அபின் தினேஷ் மோதக், ஐ.பி.எஸ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் பொது ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad