Header Ads

  • சற்று முன்

    கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்.... மாவட்ட ஆட்சியர் உத்தரவு...


    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் கோவை கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுபாடுகளுடன் சேர்ந்து  கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் நாளை (2.8.2021) முதல் விதிக்கப்படுகிறது.

    1) பிரசித்தி பெற்ற் 4 கோயில்களில் 8 ஆம் தேதி வரை பக்தர்கள்                      தரிசனம் செய்ய தடை.

    2) அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி            வரை மட்டுமே செயல்பட அனுமதி. மேலும் பார்சல் சேவைக்கு                மாலை 5 மணி முதல் 9 மணி வரைஅனுமதி.

    3) அத்தியாவசிய கடைகளான பால். மருந்தகம், காய்கரி கடைகள்            தவிர மற்றா கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை        மட்டுமே செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    4) உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.

    5) 100 அடி சாலை, கிராஸ்கட் சாலையில் அத்தியாவசிய கடைகளை           தவிர மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை.

    6) அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை                                             நிலையங்களுக்கு மட்டிமே அனுமதி. ஆனால் சில்லறை                               விற்பனைக்கு தடை.

    7) கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்                            எல்லைகளில் சோதனைச்சாவடி  அமைக்கப்பட்டு                                          கேரளாவிலிருந்து வருபவர்கள் தடுப்பூசி சான்று அல்லது                            ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என          அறிவிக்கப்பட்டுள்ளது.









    No comments

    Post Top Ad

    Post Bottom Ad