Header Ads

  • சற்று முன்

    அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம் - ஆளுநர் உத்தரவு...





    இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று  அண்ணா பல்கலைக்கழகம். 1978 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவின் பதிவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. 

    இந்நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது ஆளுநர் தலைமையிலான தேர்வுக்குழு பணிகள் நிறைவடைந்த நிலையில், புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று உத்தரவிட்டுள்ளார். 

    தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் ஆய்வுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இத்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். 33 ஆண்டுகள் கல்வித்துறையில் அனுபவமிக்க இவர் 7 நாடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு டாக்டர் ஆர்.வேல்ராஜ் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad