Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தை உளவு பார்க்கிறாரா ராஜபக்‌சே..??!!

     


    சீன அரசுடன்  கைகோர்த்து , இந்தியாவை  வேவு பார்க்க  இலங்கை  அரசு  திட்டமிட்டிருப்பதாக  தகவல்கள்   வெளியாகியுள்ளன. 
     
    கடந்த ஏப்ரல் மாதம்  12 ஆம் தேதி  தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக வெங்கடேஷ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதில் என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?? பொதுவாக  இந்தப் பதவிக்கு  நியமனம்  செய்யப்பட்ட  அதிகாரிகள்  SRILANKA FOREIGN SERVICE  மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார்கள். ஆனால்  வெங்கடேஷ்வரனோ இலங்கை  அதிபர் ராஜபக்சேவால்  நேரடியாக நியமனம்   செய்யப்பட்டிருக்கிறார்.  
     
     

    இதற்கு முன்னதாக இந்தப் பதவியில் இருந்தவர்கள்  தமிழர்களாக இருந்தபோதிலும், அவர்கள்  சட்டத்தை மீறி  ராஜபக்சே  அரசுக்கு  ஒத்துழைப்பு  வழங்கவில்லை.  இதனால் தான் தகுதியான பல தமிழர்கள் இருந்தும், SRILANKA FOREIGN SERVICE மூலம்  தேர்வு செய்யப்படாத  ஒரு நபரை, அரசியலமைப்புச்  சட்டத்தை மீறி , இந்தியாவிற்கான இலங்கை தூதராக வெங்கடேஷ்வரனை  நியமித்திருக்கிறார் ராசபக்சே. 

    இவரது நியமனத்திற்கு பின்னால் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அரசின் ரகசியங்களை உளவு பார்ப்பதற்காகவே இஅவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணம்,  இந்த வெங்கடேஷ்வரன் , 2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்தவர். 
     

     

    மேலும் ஈழப் போரின் போது , விடுதலைப் புலிகளுக்கு உணவுகள், போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் ஆகியவை எங்கிருந்து வருகிறது என்கிற ரகசியங்களை உளவு பார்த்து இலங்கை ராணுவத்திற்கு கொடுத்தவர் என்றும் கூறப்படுகிறது.  இத்தகைய பின்புலம் கொண்ட வெங்கடேஷ்,   ராணுவ உளவாளியாகவே இலங்கை அரசு அனுப்பியிருப்பதாக பலரும் குற்றம் கூறுகின்றனர். 

    அதோடுமட்டுமின்றி, பதவியேற்ற நாளிலிருந்து வெங்கடேஷ் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முக்கிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முதலில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட  தலைவர்களை சந்தித்த அவர், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவை சந்தித்தார். பின்னர் தன் ஆய்வுப் பணிகளை தொடங்கிவிட்டார். 



    காரைக்கால் துறைமுகத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளார். ஏற்கெனவே, இலங்கையில்   சீனா  துறைமுகத்தை  கட்டமைத்து வருகிறது. மேலும் இலங்கையை தன் வசப்படுத்தி  இந்தியாவிற்கு  எதிராக  பல்வேறு  திட்டங்களை தீட்ட சீன அரசு முயன்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்கள் இரண்டுமே சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகவே   பார்க்கப்படுகிறது. எனவே இந்த 2 துறைமுகங்களின்  கட்டமைப்புகளை  பலவீனப் படுத்தவே , அதனைப் பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ளவே வெங்கடேஷ்வரன் ஆய்வு நடத்தியதாக பார்க்கப்படுகிறது.  


    சமீபத்தில் திருச்சியில் உள்ள கோத்தகிரி சுகர் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் வெங்கடேஷ் விசிட் அடித்திருக்கிறார். இந்தியாவிற்கான இலங்கை தூதர், திருச்சியில் எங்கோ இருக்கும் ஒரு நிறுவனத்தை ஏன் ஆய்வு செய்ய வேண்டும் என சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இது குறித்து   குறித்து  தனது  அதிகாரப்பூர்வ  முகநூல்  பக்கத்தில்  பதிவிட்டுள்ள  வெங்கடேஷ்  , இலங்கை அதிபரின் வழிகாட்டுதலின்  பேரிலேயே  ஆய்வு நடத்தியதாக  குறிப்பிட்டுள்ளார். 


     

    அதேபோல தூத்துக்குடி அனல் மின் நிலையம் மற்றும் முட்டியாரா அனல் மின் நிலையம் ஆகியவற்றையும் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார் வெங்கடேஷ்வரன்.  ஒரு தூதரக அதிகாரி ஏன் இவற்றையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டுன் என்கிற கேள்வியே அனைவர் மனதிலும் எழுகிறது. 

    தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், இங்கு நடக்கும் பல விஷயங்களை அலுவல் ரீதியாகவும், ரகசியமாகவும் இலங்கை அரசுக்கு தெரிவிக்கவே அவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும்,தமிழகத்தில் உள்ள பல அதிகாரிகளை சந்தித்து தமிழக அரசின் தகவல்களை உளவு பார்த்து இலங்கைக்கு அனுப்புகிறார் என்கிற அதிர்ச்சிகர தகவல்களும் கிடைக்கின்றன. 




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad