Header Ads

  • சற்று முன்

    காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கம்....


    காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும், அதனால் முடக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் டெல்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட  விவகாரத்தில் ராகுல் காந்தியின் சுட்டுரைக் கணக்கு தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.  இதைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை  இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் டெல்லியிலுள்ள ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதனிடையே மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால், சுஷ்மிதா தே உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் 25 பேரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு தலைவர் ரோகன் குப்தா கூறுகையில், என்ன செய்தாலும் காங்கிரஸ் மக்களுக்காக குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.



    நாட்டில் நீதிக்காக குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரின் மக்களுக்கான குரலைத் தடுத்து நிறுத்தும் வகையில் பிரதமா் மோடி அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பிரதமா் மோடி மக்களை அடக்குகிறாா். ராகுல் காந்தி மக்களை வலிமைப்படுத்தி வருகிறாா். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad