Header Ads

  • சற்று முன்

    ஸ்டெர்லைட் - இன்னுயிரை இழந்தவர்களுக்கு தூத்துக்குடியில் நினைவகம் - முதல்வருக்கு கமல்ஹாசன் கோரிக்கை...


    பேரழிவை உருவாக்கும் திட்டங்களும் தொழிற்சாலைகளு, ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன? என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மூன்றாம் உலக நாடுகளில் தான் உயிரின் விலை மலிவானது என்பதில் வந்தது. ஐரோப்பாவில் இயற்கை வளங்களை சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய விலையை  அபராதமாக கொடுக்க நேரிடும். ஆகவே சூழலை  பாதிக்கும் எந்த உற்பத்தியையும் மூன்றாம் உலக நாடுகளில் தான் ஊக்குவிப்பார்கள். 

    இந்த மனோபாவத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதன் அடையாளங்களில் ஒன்று ஸ்டெர்லைட் பின் தங்கிய பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்து செயல்படுகிறார்கள். 

    பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி தேவைதான். ஆனால் அது மக்களில் வாழ்வை அழித்து தான் நிகழ வேண்டுமென்றால் அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது, இந்த ஆலை இங்கே அமைய வேண்டும் என்று மக்கள் கேட்கவிலை. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என அவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள்.

    ஆலையால் ஏற்பட்ட பொருளாதார அனுகூலங்களை விட ஆலை வெளிப்படுத்திய மாசுகளும் கழிவுகளும் இயற்கைக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. எதை விலையாக கொடுத்து எதை பெற்றிருக்கிறோம் என்பதை மக்களே உணர்ந்து ஒன்று திரண்டு போராடும்போது அந்தக் குரல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அந்த இரும்புக்கரம் ஓய்ந்துவிடவில்லை. எப்படியாவது ஆலையை திறந்து மீண்டும் உற்பத்தியை துவங்கிவிட முடியாதா என அது சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. 

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்பு தீர்மானத்தை இயற்றவேண்டும். இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad