Header Ads

  • சற்று முன்

    கோவை - கார் மீது லாரி மோதி இருவர் உயிரிழப்பு....


    திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டையை சேர்ந்தவர் நிதிஷ் ராகுல்(21). இவரும்  கோவை மாவட்டம் காளியாபுரம் பகுதியை சேர்ந்த கந்தசாமி (70) என்பவரும் சூலூர் அடுத்த எல்.என்.டி புறவழிச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக நிதிஷ் கார் மீது மோதியது. 

    இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுமையாக நொறுங்கியது. மேலும் விபத்தில் சிக்கி கொண்ட நிதிஷ் ராகுலும், கந்தசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

    இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் அடிப்படையில் டிப்பர் லாரி ஓட்டுநர் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad