Header Ads

  • சற்று முன்

    மனு தள்ளுபடியானாலும் முறையீடு செய்வேன்..! நடிகர் சூர்யா விளக்கம்....


    கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் சூர்யா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர். அப்போது 2007-2008 ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 ஆம் ஆண்டுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வருமான வரி தரப்பிலும், சூர்யா தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

    இந்த வழக்குகளை விசாரித்து வருமான வரித்துறை மதிப்பீட்டு அதிகாரியின் உத்தரவை உறுதி செய்தது. ஆனால் இந்த தீர்ப்பானது 3 ஆண்டுகள் தாமதமாக வெளியானதால் வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1% வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. 

    நடிகர் சூர்யா வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை என்றும், வட்டி விலக்கு பெற உரிமை இல்லையென்றும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

    ஆனால் இதுதொடர்பாக நடிகர் சூர்யா தரப்பில் தற்போது  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,” வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளோம். வருமான வரியையும், வரிக்கான வட்டியையும் செலுத்தி ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். மனு தள்ளுபடியானதை அடுத்து விரைவில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad