Header Ads

  • சற்று முன்

    சாலையில் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு....


    திருச்சி மாவட்டம் திண்டுக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(34). திருச்சியில் உள்ள எம்.ஆர்.எப் டயர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொடியாலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று ஹரிஹரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதில் பலத்த காயம் அடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஹரிஹரனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad