Header Ads

  • சற்று முன்

    சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் ...போக்சோவில் கைது


    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவருக்கும் மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில்  இருவரும் 
    நண்பர்களாக பேசி வந்தனர். இது ஒரு கட்டத்தில் காதலாக மலர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சந்தோஷ் குமார் அடிக்கடி சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் தனிமையில் இருந்த போது சிறுமிக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார் சந்தோஷ் குமார். அந்த வீடியோவை வைத்து கொண்டு சந்தோஷ் சிறுமியிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  

    இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது தாய் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad