Header Ads

  • சற்று முன்

    அதிவேகமாக வந்த கார்... கர்ப்பிணி உட்பட மூவர் உயிரிழப்பு....


    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவை சேர்ந்த கிழாய் கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவரது மனைவி தமிழ்வாணி (30).  கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக வைதீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் அவர்கள் வாகனம் மீது மோதியதில் புருஷோத்தமனும் அவரது கர்ப்பிணி மனைவி தமிழ்வாணியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தொடர்ந்து வேகமாக சென்ற கார் 100 நாள் வேலைக்கு சாலையோரம் நடந்து சென்ற தையல்நாயகி(52), ராணி (60) ஆகியோர் மீதும் மோதியது. அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் விபத்தை கண்ட அங்கிருந்த மக்கள் விரைந்து வந்து ராணி, தையல்நாயகி இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தையல்நாயகி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராணி மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் காரை அடித்து நொறுக்கி குளத்தில் தள்ளிவிட்டனர்.  இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல் தப்பியோடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கார் ஏற்றி கர்ப்பிணி உட்பட மூவர் உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad