Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம் தகவல்...!


    தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஏனைய மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

    இதனைத் தொடர்ந்து நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளுல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






    .



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad