Header Ads

  • சற்று முன்

    படத்துல இதெல்லாம் பாக்க முடியாது... ! நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு....


    விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள “நெற்றிக்கண்” திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் நாளை நேரடியாக வெளியாகிறது. இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ், கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்     பகிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ நெற்றிக்கண் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகிய நிலையில்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad