Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்....


    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

    மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று குறிபிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம்  குறிப்பிடப்பட்டுள்ளது.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad