Header Ads

  • சற்று முன்

    இறந்த தாத்தாவின் உடலை பிரிட்ஜிக்குள் வைத்த பேரன்....


    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் பாலய்யா ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர். அவரது பேரன் நிகிலுடன் சேர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.  இந்நிலையில் பாலய்யா வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் பாலய்யா வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த பிரிட்ஜிக்குள் துர்நாற்றம் வருவதை கண்ட போலீசார் அதனை திறந்து பார்த்ததும் பாலய்யாவின் சடலத்தை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். 


    இச்சம்பவம் குறித்து பேரன் நிகிலுடம் போலீசார் விசாரணை நடத்தியபோது நிகில் கூறியதாவது, மூன்று நாட்களுக்கு முன்பு தாத்தா உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும், இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் உடலை பிரிட்ஜிக்குள் வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாலய்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad