Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தின் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன்...


    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, ’அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’ என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம்செலுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக நிதி நிலை வெள்ளை அறிக்கையை தயாரிக்கும் பணியில் நிதித்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.   நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை  நிதி நிலை தொடர்பான 120 பக்க வெள்ளை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 
    “இது என் பெயரில் வெளியிடுகிற அறிக்கையே தவிர, இதற்கு பல  பலரும் வழிகாட்டியாக இருந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டிய பாதையில் வெளிவந்த அறிக்கையாகும். இந்த அறிக்கையை  நாங்கள் வெளியிடுவதற்கு முன்   குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்களின்  வெள்ளை அறிக்கைகளை ஆய்வு செய்தோம்” என தெரிவித்துள்ளார். 

    தமிழகத்தில் நிதி வருவாய் பற்றாக்குறை  2020-2021 ஆம் ஆண்டில் ரூ. 61,320 கோடியாக உள்ளது. 2021-2022 ஆம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின் படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ. 5,70,189 கோடியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் உள்ளது என்று வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது கடன் அளவு 4,85,502 கோடியை 54 லட்சம் என அறிவிக்கப்பட்டது. தற்போதை  2021 ஆம் ஆண்டு இறுதிக்குள்  5.70 லட்சம் கோடியாக உயரும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 13 மடங்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.














    No comments

    Post Top Ad

    Post Bottom Ad