Header Ads

  • சற்று முன்

    சேலத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்...மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....


    கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இன்றுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனாவால் கூடுதல் கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். 
    இந்த உத்தரவின் படி சேலத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளன. 

    சேலம் மாநகராட்சி:

    1) சேலம் மாநகர எல்லைக்கும் செயல்படும் அனைத்து ஜவுளி                      கடைகள், வணிகவளாகங்கள், நகைக்கடைகள், மால்கள், சூப்பர்          மார்க்கெட்டுகள் ஆகியவை மாலை 6  மணி வரை மட்டுமே                       செயல்பட அனுமதி. மேலும் ஞாயிற்று கிழமைகளில் செயல்பட               அனுமதி இல்லை. 

    2) நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, லீபஜார்,                          வீரபாண்டியார் நகர், செவ்வாய்பேட்டை மெயின் ரோடு, பால்                  மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மாலை      6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

    3)  சின்னகடை வீதி, வ.உ.சி மார்க்கெட் ஆகிய இடங்களில்                               செயல்படும் காய்கறி கடைகள், பூ கடைகள் மற்றும்                                     பழக்கடைகள் ஆகியவை மாலை 6 மணி வரை மட்டுமே                             செயல்பட  அனுமதி.

    4) மால்கள், வணிக வளாகங்கள், நகைக்கடைகள் போன்ற                            அனைத்து  வணிக வளாகங்களும் குளிர்சாதன வசதி பயன்படுத்த      தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம் ஊரகம்:

    1) வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்                ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை                                              விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும்                 பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி 2 தவணைகள்                           செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே                                               அனுமதிக்கப்படுவர்.

    2) மேட்டூர் அணை பூங்கா 23 ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல               தடை விதிக்கப்பட்டுள்ளது. கொங்கணா புரம் வாரச்சந்தை,                         வீரகனூர் வாரச்சந்தை வரும் 23 ஆம் தேதி வரை செயல்பட தடை.

    3) இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும்           பொருட்டு  திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து                       விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி                  செய்ய வேண்டும்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad