Header Ads

  • சற்று முன்

    பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து... ஸ்டாலின் அறிப்பு..


     

    இந்திய துணி தொழில்  வணிகத்தின் மூன்றில் ஒரு பங்கே தமிழ்நாடு துணி தொழில் வகிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 1,570 நூற்பாலைகள் உள்ளன. இந்நாட்டில் உள்ள மொத்த நூற்புத்திறனில், தமிழகத்தில் உள்ள இந்த நூற்பாலைகளில் நூற்கப்படும் நூல் 45%.  இருப்பினும் தமிழகத்தில் அமைந்துள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சின் அளவில் 95% பிற மாநிலத்திலிருந்து கொண்டுவரப்படுகிறது. 


    இவ்வாறு  வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சுக்கு நுழைவு வரியாக 1% வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறு, குறு நூற்பாலைகள் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பஞ்சு மீதான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக நெசவு தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். 


    இதனைக் கருத்தில் கொண்டு வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1% நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.  110 விதியின் கீழ், நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த் சட்டசபை கூட்டத்தொடரிலேயே  கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

     

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad